உன்னை உணர்ந்தேன் என்னில் நானே...
என்னை இழந்தேன் உன்னில் தானோ..
என்றும் இருப்பேன் உனக்கே உனக்காய்..
எந்தன் இதயம் நீயே அன்பே..
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே...
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...
என் விழியில் முழுதும்ம்ம்ம்ம்
என் விழியில் முழுதும்
உந்தன் விழியே...
என் உள்ளம் விரும்பும் உணர்வும் நீயே...
அன்னம் மறந்தேன்....
அகிலம் மறந்தேன்....
அனைத்தும் நீயே என்றே உணர்ந்தேன்...
உன் உள்ளம் என்னும் மலரில் தானே
பனித்துளியாய் துளியாய் விழுந்தேன் நானே
உன்னில் உன்னில் கரைவேன் நானே...
நினைவில் நீ இருக்கையில்
நித்தம் கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை தேடுதே
உன்னால் தானே....
உன்னை உணர்ந்தேன் என்னில் தானே
என்னை உணர்வாய் உன்னில் தானே....
இரவில் நீயும் கனவில் வந்தால்
விடியல் தள்ளி போகும் கண்ணே..
விழித்து பார்த்தல் விழியும் மனமும்
உன்னில் உன்னில் மயங்கும் மயங்கும்...
மனதில் மலர்வாய் வாடா மலராய்...
மலரவிடால் உதிர்வேன் சருகாய்...
இதயம் விரும்பும் இனிமை நீயே..
துன்பம் துறந்த இன்பம் நீயே..
நினைவில் நீ இருக்கையில்
நித்தம் கண் தேடுதே
கண்ணீர் இமை மோதுதே
இதயம் அதில் நனையுதே
உயிரும் உனை தேடுதே
உன்னால் தானே....
உன்னை உணர்ந்தேன் என்னில் தானே
என்னை உணர்வாய் உன்னில் தானே....
விண்ணில் பறந்தேன் தன்னந் தனியே...
உள்ளம் முழுதும் உந்தன் நினைவே...